பலத்த அடிவாங்கிய பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் கோடி அவுட்..

பலத்த அடிவாங்கிய பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் கோடி அவுட்..

தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய நகரங்களில் மினி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கையால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது உள்பட பல காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது.

பலத்த அடிவாங்கிய பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் கோடி அவுட்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன், பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி, பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பலத்த அடிவாங்கிய பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் கோடி அவுட்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 830 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,855 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 120 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.17 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.21 லட்சம் கோடியை இழந்தனர்.

பலத்த அடிவாங்கிய பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் கோடி அவுட்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 660.63 புள்ளிகள் சரிந்து 36,033.06 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 195.35 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,607.35 புள்ளிகளில் முடிவுற்றது.