கடந்த 5 தினங்களில் ரூ.1.45 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்தது…

கடந்த 5 தினங்களில் ரூ.1.45 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்தது…

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று (வெள்ளிக்கிழமை) வரையிலான இந்த வார பங்கு வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முதலாவதாக கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. கோவிட்-19 நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, எல்லையில் இந்தியா-சீனா இடையிலான பதற்றம் தணிந்தது மற்றும் சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

கடந்த 5 தினங்களில் ரூ.1.45 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்தது…

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.95 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.50 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.45 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

கடந்த 5 தினங்களில் ரூ.1.45 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்தது…

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 572.91 புள்ளிகள் உயர்ந்து 36,594.33 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 160.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,768.05 புள்ளிகளில் முடிவுற்றது.