நிதி நிலை முடிவுகள், தடுப்பூசி உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

 

நிதி நிலை முடிவுகள், தடுப்பூசி உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், கோவிட்-19 தடுப்பூசி உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது 2020 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இந்த வாரம் முதல் வெளிவர உள்ளன. குறிப்பாக டி.சி.எஸ். நிறுவனம் வரும் 8ம் தேதியன்று தனது டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளது. முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் டிசம்பர் காலாண்டில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தின் மார்க்கிட் மேனுபாக்சரிங் பி.எம்.ஐ. இன்று வெளியாகிறது. மார்க்கிட் சேவைகள் துறை பி.எம்.ஐ. வரும் புதன்கிழமை வெளிவருகிறது.

நிதி நிலை முடிவுகள், தடுப்பூசி உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
டி.சி.எஸ்.

இந்தியாவில் அவசர காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் மருந்துக்கும் மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(டிசிஜிஐ) அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி சோதனை நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான எந்தவொரு முன்னேற்றமான தகவல்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக இருக்கும். புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையிலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் உயர்வாகவே உள்ளது.

நிதி நிலை முடிவுகள், தடுப்பூசி உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
கோவிட்-19 தடுப்பூசி மருந்து

அமெரிக்காவில் வரும் 5ம் தேதியன்று ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதவிர அமெரிக்கா, ஐரோப்பிய பகுதி, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிட உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.