• April
    06
    Monday

Main Area

Main



முதலீட்டாளர்களின் பணம் ரூ.1.64 லட்சம் கோடி அவுட்! சென்செக்ஸ் 285 புள்ளிகள் வீழ்ச்சி....

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் அந்த வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சீனாவுக்கு செல்லுவதை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளன.  மேலும் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

கொரோனா வைரஸ் தாக்கம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் என்.டி.பி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, இண்டஸ்இந்த் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 818 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,613 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.46 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.64 லட்சம் கோடி  நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் சரிவு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 284.84 புள்ளிகள் குறைந்து 40,913.82 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.70 புள்ளிகள் சரிந்து 12,035.80 புள்ளிகளில் முடிவுற்றது.
 

2018 TopTamilNews. All rights reserved.