• February
    25
    Tuesday

Main Area

Main



அமெரிக்க தாக்குதலால் பங்குச் சந்தையில் சரிவு.... சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ச்சி...

அமெரிக்க படைகள் தாக்குதல்
அமெரிக்க படைகள் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் படை தளபதி காசிம் சுலைமானி உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையில் நிலையற்றதன்மை நிலவியது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் படுத்தது.

கச்சா எண்ணெய்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, டி.சி.எஸ்., எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ் மற்றும் டெக்மகிந்திரா உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, என்.டி.பி.சி., ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சன்பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,251 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,273 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 190 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.87 லட்சம் கோடியாக சரிந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 162.03 புள்ளிகள் குறைந்து 41,464.61 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 55.55 புள்ளிகள் இறங்கி 12,226.65 புள்ளிகளில் முடிவுற்றது.

2018 TopTamilNews. All rights reserved.