• February
    24
    Monday

Main Area

Main



முதலீட்டாளர்களுக்கு இன்று ரூ.1.12 லட்சம் கோடி லாபம்! சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்தது...

பங்குச் சந்தையில் லாபம்
பங்குச் சந்தையில் லாபம்

சர்வதேச பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் இறங்கு முகத்தில் இருந்தபோதிலும் அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை. யெஸ் வங்கியை வீழ்ச்சி அடைய விடமாட்டோம் என ஸ்டேட் வங்கியின் தலைவர் தெரிவித்தது போன்ற உள்நாட்டு நிலவரங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

எல் அண்டு டி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,436 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,092 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று ஒரு நாளில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.12 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

டெக் மகிந்திரா

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்டு டி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஸ்டேட் வங்கி, டைட்டன் மற்றும் இன்போசிஸ் உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக் மகிந்திரா, டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 271.02 புள்ளிகள் உயர்ந்து 41,386.40 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 73.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,180.35 புள்ளிகளில் நிலைகொண்டது.

2018 TopTamilNews. All rights reserved.