• February
    27
    Thursday

Main Area

Main



காளைக்கு ஒன்னு! கரடிக்கு ஒன்னு! முதலீட்டாளர்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி லாபம்....

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் உள்ளதால் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். மேலும் பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக எந்தவொரு  குறிப்பிடும்படியான செய்திகள் வெளியாகததால் இன்று வர்த்தகம் மிகவும் மந்தகதியில் இருந்தது.

பார்தி ஏர்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பார்மா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் மாருதி உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,331 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,210 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.54 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 12.81 புள்ளிகள் உயர்ந்து 41.945.37 புள்ளிகளில் நிலை  கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 3.15 புள்ளிகள் சரிந்து 12,352.35 புள்ளிகளில் முடிவுற்றது.

2018 TopTamilNews. All rights reserved.