• February
    24
    Monday

Main Area

Main



தொடர்ந்து வெற்றி நடை போடும் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது...

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

கடந்த நவம்பரில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே முதல்கட்ட வர்த்தகம் ஒப்பந்தம் அடுத்த சில தினங்களில் கையெழுத்தாக உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் தணிந்தது இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ், இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்போசிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,544 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 984 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 183 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.75 லட்சம் கோடியாக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.97 புள்ளிகள் உயர்ந்து 41,859.69 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 72.75 புள்ளிகள் அதிகரித்து 12,329.55 புள்ளிகளில் முடிவுற்றது.

2018 TopTamilNews. All rights reserved.