• April
    06
    Monday

Main Area

Main



ரூ.86 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..... சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்தது..

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் நன்றாக இருந்ததால் அந்நாட்டு பங்குச் சந்தை நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதனால் இன்று காலையில் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அமெரிக்காவின் சில இறக்குமதி பொருட்கள் மீதான வரியை சீனா குறைக்க முடிவு செய்துள்ளது. இது போன்ற சர்வதேச நிலவரங்கள் பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வழிவகுத்தன.

இண்டஸ்இந்த் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, ஸ்டேட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டைட்டன், இன்போசிஸ், ஐ.டி.சி., ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக்மகிந்திரா வங்கி,  நெஸ்லே இந்தியா மற்றும் டி.சி.எஸ். உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்போசிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,388 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,094 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.04 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.86 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 163.37 புள்ளிகள் உயர்ந்து 41,306.03 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 48.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,137.95 புள்ளிகளில் நிலை கொண்டது.

2018 TopTamilNews. All rights reserved.