• February
    17
    Monday

Main Area

Main



ரூ.10 ஆயிரம் கோடியை பங்குச் சந்தையில் இழந்த முதலீட்டாளர்கள்......சென்செக்ஸ் 106 புள்ளிகள் வீழ்ச்சி....

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

சீனாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு முடிந்து விட்டது என்ற நினைக்கையில், தற்போது புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருவது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை  நிலவரம் நிலையாக இருப்பது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.

கொரோனாவைரஸ் பாதிப்பு

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,056 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,433 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.57 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இண்டஸ்இந்த் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டைட்டன், ஸ்டேட் வங்கி, சன்பார்மா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, என்.டி.பி.சி., டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி. மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 106.11 புள்ளிகள் குறைந்து 41,459.79 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 26.55 புள்ளிகள் சரிந்து 12,174.65 புள்ளிகளில் முடிவுற்றது.

2018 TopTamilNews. All rights reserved.