• April
    06
    Monday

Main Area

Main



6 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.27 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 1,878 புள்ளிகள் வீழ்ச்சி....

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

மத்திய பட்ஜெட் முன்னிட்டு 1ம் தேதி (நேற்று) பங்குச் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடந்த வாரம் மொத்தம் 6 நாட்கள் வர்த்தகம் நடைபெற்றது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பியது. இதன் தாக்கம் காரணமாக சில நாட்கள் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்களை கவரவில்லை என தெரிகிறது. இதனால் நேற்று பங்குச் சந்தைகள் மரண அடி வாங்கின. ஒட்டு மொத்தத்தில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் கசப்பான அனுபவமாக அமைந்தது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ்

மும்பை பங்குச் சந்தையில் பட்டிலியடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த மாதம் 24ம் தேதியன்று நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.27 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த 6 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.7.27 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் இழந்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்

சென்ற வாரத்தில் ஒட்டு மொத்த அளவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,877.53 புள்ளிகள் வீழ்ந்து 39,735.53 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 586.40 புள்ளிகள் சரிந்து 11,661.85 புள்ளிகளில் நிலை கொண்டது.

2018 TopTamilNews. All rights reserved.