• February
    17
    Monday

Main Area

Main



மத்திய பட்ஜெட்டால் மரண அடி வாங்கிய பங்கு வர்த்தகம்! ஒரே நாளில் ரூ.3.59 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்....

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு துறைக்கும் குறிப்பிடத்தக்க சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. பிரிவு 80சி இன் கீழ் அனைத்து விலக்குகளையும் நீக்குவதில் சில ஏமாற்றங்கள் இருந்தன. நீண்டகால முதலீடு ஆதாய வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறைக்கப்படவில்லை. மத்திய அரசின் நிறுவன பங்கு விற்பனை இலக்கு கொஞ்சம் அதிகம். டிவிடெண்ட் விநியோக வரி நீக்கப்பட்டாலும், டிவிடெண்ட் பெறுபவரிடம் வரி வசூலிக்கப்படும். ஒட்டு மொத்த அளவில் முதலீட்டாளர்களுக்கு மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்ததால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

நிர்மலா சீதாராமன்

டி.சி.எஸ்., இந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, டெக்மகிந்திரா மற்றும் இன்போசிஸ் உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.டி.சி., எல் அண்டு டி, எச்.டி.எப்.சி., ஸ்டேட் வங்கி, ஓ.என்.ஜி.சி. மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 611 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,724 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 126 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.59 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில்,மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 987.96 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 39,735.53 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 300.25 புள்ளிகள் சரிந்து 11,661.85 புள்ளிகளில் நிலைகொண்டது.

2018 TopTamilNews. All rights reserved.