தொடர்ந்து 6வது வாரமாக இந்த வாரமும் பங்குச் சந்தைகளின் வெற்றி தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

தொடர்ந்து 6வது வாரமாக இந்த வாரமும் பங்குச் சந்தைகளின் வெற்றி தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

கடந்த 5 வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான சாதகமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உலக நாடுகளில் முதலாவதாக இங்கிலாந்து, பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் அந்நாட்டு அரசுடன் 10 கோடி டோசுக்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 27 நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது இது போன்ற தகவல்கள் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு சாதகமாக அமையலாம்.

தொடர்ந்து 6வது வாரமாக இந்த வாரமும் பங்குச் சந்தைகளின் வெற்றி தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம் மற்றும் டிசம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும். அமெரிக்காவில் புதிய நிதி நிவாரண மசோதாவுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளதால் அதன் தாக்கம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. அமெரிக்க பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டின.

தொடர்ந்து 6வது வாரமாக இந்த வாரமும் பங்குச் சந்தைகளின் வெற்றி தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
அன்னிய முதலீடு

டிசம்பர் முதல் வாரத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். அவர்கள் 2021 ஜனவரி வரை தொடர்ந்து இந்திய பங்குகளில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலரை நெருங்கியது. இதனால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் உன்னிப்பாக கவனிக்கப்படும். இதுதவிர, சர்வதேச நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.