கொரோனா, பிரெக்சிட் உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு..

 

கொரோனா, பிரெக்சிட் உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு..

கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள், பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி எந்த நேரமும் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்தியாவில் தடுப்பூசி போடுவது சம்பந்தமாக ஒத்திகை நிகழ்ச்சி இந்த வாரம் நடைபெற உள்ளது. இது பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த வாரம் நடைபெற உள்ளது. இது பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான செய்தியாகும். அதேசமயம் புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவ தொடங்கியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்றைய தினம் பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். 2020 டிசம்பர் மாத வாகன விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்களை வரும் வெள்ளிக்கிழமை முதல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட உள்ளன. அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு கடந்த வாரம் குறைந்தது. இருப்பினும் கொரோனா வைரஸ் இடர்பாடுக்கு மத்தியில் அவர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா, பிரெக்சிட் உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு..
கோவிட்-19 தடுப்பூசி மருந்து

அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர். கடந்த வாரம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3,400 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அந்தோணி வேஸ்ட் ஹெண்ட்லேன் செல் நிறுவனம் இந்த வாரம் தனது பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வர்ததக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்ததுக்கு இங்கிலாந்து நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம். அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் நீண்ட இழுபறியாக இருந்த பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.

கொரோனா, பிரெக்சிட் உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு..
பிரெக்சிட் ஒப்பந்தம்

இதுதவிர சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்களும் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.