4 நாள்தான் பங்கு வர்த்தகம்… ரூ.18 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

 

4 நாள்தான் பங்கு வர்த்தகம்… ரூ.18 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ஏமாற்றமாக அமைந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. இருப்பினும் மற்ற 3 தினங்களிலும் வர்த்தகம் ஏற்றம் கண்டது. இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது பங்குச் சந்தையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

4 நாள்தான் பங்கு வர்த்தகம்… ரூ.18 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..
புதிய வகை கொரோனா வைரஸ்

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையிலான கடந்த 4 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.185.18 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 18) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.185.36 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

4 நாள்தான் பங்கு வர்த்தகம்… ரூ.18 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..
சென்செக்ஸ்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 12.85 புள்ளிகள் உயர்ந்து 46,973.54 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 11.30 புள்ளிகள் இறங்கி 13,749.25 புள்ளிகளில் முடிவுற்றது.