முதலீட்டாளர்களை ரத்த கண்ணீர் விட வைத்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 1407 புள்ளிகள் வீழ்ச்சி

முதலீட்டாளர்களை ரத்த கண்ணீர் விட வைத்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 1407 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. முதலீட்டாளர்களுக்கு ரூ.6.64 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இருப்பது உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லாப நோக்கம் கருத்தி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளினர். சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் பலத்த அடிவாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் நெஸ்லே இந்தியா, இன்போசிஸ் உள்பட 30 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது.

முதலீட்டாளர்களை ரத்த கண்ணீர் விட வைத்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 1407 புள்ளிகள் வீழ்ச்சி
இன்போசிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 589 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,436 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 167 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.178.72 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.6.64 லட்சம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களை ரத்த கண்ணீர் விட வைத்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 1407 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1406.73 புள்ளிகள் சரிந்து 45,553.96 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 432.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 13,328.40 புள்ளிகளில் முடிவுற்றது.