5 நாளும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.60 லட்சம் கோடி லாபம்…

 

5 நாளும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.60 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 862 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது, சில்லரை விலை பணவீக்கம் சிறிது குறைந்தது, கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான முன்னேற்றமான தகவல், எதிர்பார்த்ததை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் சரிவிலிருந்து வேகமாக மீளும் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

5 நாளும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.60 லட்சம் கோடி லாபம்…
பணவீக்கம்

கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.185.36 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 11) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.182.76 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.60 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

5 நாளும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.60 லட்சம் கோடி லாபம்…
மும்பை பங்குச் சந்தை

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 861.68 புள்ளிகள் உயர்ந்து 46,960.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 246.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,760.55 புள்ளிகளில் முடிவுற்றது.