இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

பணவீக்கம், கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா மற்றும் உலக நாடுகளில் தொடர்ந்து குறைய தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர தொடங்கி விட்டது. பல நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்க தொடங்கி விட்டன. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பல நாடுகள் ஒப்புதல் கொடுத்து வருகின்றன. பர்ஜர் கிங் நிறுவனத்தின் பங்குகள் இந்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. மிஸஸ் பெக்டர்ஸ் புட் ஸ்பெஷாலிட்டிஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் (டிசம்பர் 15) களம் இறங்குகிறது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
பணவீக்கம்

அமெரிக்கா விரைவில் பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற தன்மை நிலவுவது பாதகமான அம்சமாகும். கடந்த நவம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் மற்றும் சில்லரை விலை பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
கோவிட்-19 தடுப்பூசி

அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். அதேசமயம் உள்முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர். இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவையும் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் என்று பங்குச் சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.