”சீனாவில் முதியவரின் கண்ணில் உயிருடன் இருந்த 20 புழுக்கள் நீக்கம்”!

 

”சீனாவில் முதியவரின் கண்ணில்  உயிருடன் இருந்த 20 புழுக்கள் நீக்கம்”!

சீனாவீல் 60 வயது முதியவர் ஒருவரின் கண்களில் இருந்து 20 உயிருள்ள புழுக்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் சுழொவ் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் வான். இவருக்கு கண்களில் அரிப்பும் எரிச்சலும் லேசான வலியும் இருந்த தை அடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதையடுத்து இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவரின் கண்களில் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் டாக்டர் ஜி டிங் தலைமையிலான மருத்துவ குழுவினர் மேற்கொண்ட சிகிச்சையில் அந்த முதியவரின் வலது கண்ணிலிருந்து உயிருள்ள 20 புழுக்களை நீக்கினர்.

”சீனாவில் முதியவரின் கண்ணில்  உயிருடன் இருந்த 20 புழுக்கள் நீக்கம்”!

நாய் மற்றும் பூனைகளில் கண்களில் காணப்படும் நெமோடோட்ஸ் எனப்படும் ஒரு வகை புழுக்கள் வகையை சேர்ந்த புழுக்கள் தான் முதியவரின் கண்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த புழுக்கள் முதியவரின் கண்களுக்குள் எப்படி புகுந்தது என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. செல்லப்பிராணிகளை கூட தாம் வளர்க்கவில்லை என அந்த முதியவர் கூறி உள்ள நிலையில், இந்த புழுக்கள் அவர் கண்களுக்குள் எப்படி புகுந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். முத்துக்குமார்