சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்..

சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்..

இந்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் இன்று முடிவடைந்தது. எதிர்பார்த்தது போலவே முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை. அதேசமயம் நிறுவன மற்றும் தனிநபர் கடன்களை வாராக் கடனாக வகைப்படுத்தாமல் ஒரு முறை மறுசீரமைப்பு செய்து கொள்ள அனுமதி அளித்தது. இது பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக அமைந்தது. ஒரு கட்டத்தில் மளமளவென ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள் பின்பு சிறிது சரிய தொடங்கின. இருப்பினும் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தன.

சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டி.சி.எஸ். மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் ஆட்டோ, மகிந்திரா அண்டு மகிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,581 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1.076 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.149.99 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.27 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 362.12 புள்ளிகள் உயர்ந்து 38,025.45 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 98.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,200.15 புள்ளிகளில் முடிவுற்றது.