முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 748 புள்ளிகள் உயர்வு

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 748 புள்ளிகள் உயர்வு

எச்.டி.எப்.சி. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக 3 ஆண்டுகளுக்கு சஷிதர் ஜெகதீஷனை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. இதனால் இன்று எச்.டி.எப்.சி. வங்கி பங்கு விலை மளமளவென உயர்ந்தது. பல நிறுவனங்களின் விலை குறைவாக இருந்ததால் முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் இன்று தொடங்கியது. ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் என பெரும்பாலான நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் சர்வதேச நிலவரங்களும் சாதகமாக இருந்ததால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 748 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி. வங்கி, மாருதி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக் மகிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 748 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,705 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 936 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 141 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.22 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.03 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.03 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 748 புள்ளிகள் உயர்வு
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 748.31 புள்ளிகள் உயர்ந்து 37,687.91 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 203.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,095.25 புள்ளிகளில் முடிவுற்றது