பங்கு வர்த்தகத்தை வீழ்த்திய சீனா மற்றும் ஜி.டி.பி….. முதலீட்டாளர்களுக்கு ரூ.4.79 லட்சம் கோடி நஷ்டம்..

பங்கு வர்த்தகத்தை வீழ்த்திய சீனா மற்றும் ஜி.டி.பி…..  முதலீட்டாளர்களுக்கு ரூ.4.79 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் 839 புள்ளிகள் குறைந்தது.

இந்தியாவின் லடாக் எல்லையில் சீனப் படைகள் கடந்த 2 நாட்களாக அத்துமீறும் சம்பவம் நடந்து வருவதாக செய்தி வெளியானதால், இந்தியா-சீனா இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்களை இன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு மத்திய அரசு வெளியிடுகிறது. அந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு கடும் வீழ்ச்சி கண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது.

பங்கு வர்த்தகத்தை வீழ்த்திய சீனா மற்றும் ஜி.டி.பி…..  முதலீட்டாளர்களுக்கு ரூ.4.79 லட்சம் கோடி நஷ்டம்..
சீன ராணுவத்தினர்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி.மற்றும் டி.சி.எஸ். ஆகிய 2 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேசமயம், சன்பார்மா, பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், என்.டி.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 28 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகத்தை வீழ்த்திய சீனா மற்றும் ஜி.டி.பி…..  முதலீட்டாளர்களுக்கு ரூ.4.79 லட்சம் கோடி நஷ்டம்..
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 536 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,329 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 150 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.53 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.4.79 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகத்தை வீழ்த்திய சீனா மற்றும் ஜி.டி.பி…..  முதலீட்டாளர்களுக்கு ரூ.4.79 லட்சம் கோடி நஷ்டம்..
ஓ.என்.ஜி.சி.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 839.02 புள்ளிகள் சரிந்து 38,628.29 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 260.10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,387.50 புள்ளிகளில் முடிவுற்றது.