வாகன விற்பனை, கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்ததகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

 

வாகன விற்பனை, கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்ததகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

ஆகஸ்ட் மாத வாகன விற்பனை, கொரோனா நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாத வாகன விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரும் 1ம் தேதி முதல் வெளியிட உள்ளன. லாக்டவுன் தளர்வுக்கு பிறகு வாகன விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் (ஏப்ரல்-ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரத்தை ஆகஸ்ட் 31ம் தேதியன்று மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிடுகிறது. அந்த காலாண்டில் கோவிட்19 காரணமாக அமல்படுத்த லாக்டவுன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவை சந்தித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன விற்பனை, கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்ததகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
கார் தயாரிப்பு ஆலை

ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, நால்கோ, ஜே.கே. சிமெண்ட், என்.எச்.பி.சி., டிஷ் டிவி இந்தியா, ஷாலிமர் பெயிண்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா போர்ஜிங் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டி விட்டது. அதேசமயம் ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 லட்சம் வரை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. அதிகளவில் பரிசோதனை செய்யப்படுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு காரணம். கொரோனா தடுப்பூசி சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவது நல்ல செய்தி.

வாகன விற்பனை, கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்ததகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
கோல் இந்தியா

அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த வாரம் அவற்றின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இது தவிர சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் இந்த வார பங்கு வர்த்கத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.