சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி லாபம்…

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி லாபம்…

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான சாதகமான தகவல் மற்றும் அமெரிக்கா-சீனா வர்த்தகம் தொடர்பாக நேர்மறையான அறிகுறிகள் தென்படுவதால் தங்கம் விலை கடந்த சில தினங்களாக சரிந்து வருவது, நம் நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி லாபம்…
இண்டஸ்இந்த் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக்மகிந்திரா வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக்சிமெண்ட்,ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி லாபம்…
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,679 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,156 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 186 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.73 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.85 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம் எற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 230.04 புள்ளிகள் உயர்ந்து 39,073.92 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 77.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,549.60 புள்ளிகளில் முடிவுற்றது.