வரும் வாரம் பங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

 

வரும் வாரம் பங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

வரும் வாரம் சுஸ்லான் எனர்ஜி, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ், கேன் பின் ஹோம்ஸ் மற்றும் எச்.சி.சி. உள்பட மொத்தம் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டி விட்டது. அதேசமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 75 சதவீதமாக உள்ளது. கோவிட்-19க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை தொற்றுநோயான கொரோனா வைரஸ் முக்கிய செய்தியாகத்தான் இருக்கும். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வரும் 27ம் தேதி கூடுகிறது. அந்த கூட்டத்தில் வரி அல்லது செஸ் விகிதங்களை உயர்த்துவதற்கு பதிலாக மாநிலங்களுக்கான இழப்பீட்டு பிரச்சினையை தீர்க்க சந்தை கடன் வாங்குவது தொடர்பான பிரச்சினையில் ஒரு மித்த கருத்தை எட்ட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வாரம் பங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..
எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

வரும் வியாழக்கிழமை ஆகஸ்ட் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். சாடின் கிரெடிட்கேர் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடு வரும் 26ம் தேதி முடிவடைகிறது. மின்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடு வரும் 25ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி முடிவடைகிறது. அமெரிக்காவில் கடந்த ஜூலை மாத புதிய வீடுகள் விற்பனை, வாரந்திர வேலையின்மை கோரிக்கை, கடந்த மாத தனிநபர் வருவாய் மற்றும் செலவினம் குறித்த புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது. மேலும், ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது.

வரும் வாரம் பங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் (கோப்புப்படம்)

பங்குச் சந்தை உயர்வுக்கு அன்னிய நிதி முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரிப்பதும் முக்கிய காரணமாக இருக்கும். இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆகையால் மேற்கண்ட காரணிகளை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.