Home இந்தியா வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கி கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிலவரங்களை கவனியுங்க.. பங்கு சந்தை நிபுணர்கள் கணிப்பு

வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கி கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிலவரங்களை கவனியுங்க.. பங்கு சந்தை நிபுணர்கள் கணிப்பு

டி.எல்.எப்., டாடா ஸ்டீல், லுப்பின், டைட்டன்,கனரா வங்கி, அதானி பவர் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் வாகன விற்பனை முந்தைய மே, ஜூன் மாதங்களை காட்டிலும் நன்றாக இருந்தது. இரு மாதங்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் நடக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. வரும் 6ம் தேதியன்று ரிசர்வ் வங்கி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்க உள்ளது.

டாடா ஸ்டீல்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.80 கோடியை தாண்டி விட்டது. மேலும் சுமார் 7 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்கா-சீனா இடையிலான மோதல், ஜப்பான், சீனா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் முக்கிய பொருளாதார புள்ளி விவரங்கள் வெளிவருகிறது.

கொரோனா வைரஸ்

இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆகையால் மேற்கண்ட காரணிகளை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஸ்டாலின் பாமகவுல இருக்கிறாரா? திமுகவுல இருக்கிறாரா? மாங்காவ விடவே மாட்டேங்கிறார்… வைரலாகும் டாக்டரின் பேச்சு

எடப்பாடி என்று ஓர் ஊர் பெயர் இருக்கக் கூடாதா..? அத நீங்க எடுபுடி, டெட்பாடி என எதுகை, மோனையில் பேசினால், மனநலம் குன்றியவர்கள்தான் இப்படி பேசுவார்கள். உங்க மனநலம் எப்படி...

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா உறுதி!

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலின் விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட...

50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.04 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டு விட்டு சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. அன்னிய முதலீட்டாளர்கள்...

சுயலாபத்திற்காக காவு கொடுத்த… திருமாவளவனுக்கு பாஜக எழுப்பிய கேள்வி

தனிச்சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் நிர்பந்திப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டிடுகிறேன் என்று முதலில் மதிமுக வைகோ ஆரம்பித்தார். அடுத்து விசிக திருமாவளவன் சொன்னார். அப்புறம் ஐஜேகே...
Do NOT follow this link or you will be banned from the site!