இந்த வாரம் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… இருந்தாலும் ரூ.44 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

இந்த வாரம் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… இருந்தாலும் ரூ.44 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. இந்த வாரத்தின் முதல் 2 வர்த்தக தினங்களான கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் நேற்று வரையிலான 3 நாட்களிலும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, முன்னணி நிறுவனங்களின் நிதி முடிவுகள் உள்ளிட்ட காரணிகள் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்த வாரம் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… இருந்தாலும் ரூ.44 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.151.39 லட்சம் கோடியாக உயர்ந்தது. முந்தைய வார வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 7ம் தேதி) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.150.95 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.44 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இந்த வாரம் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… இருந்தாலும் ரூ.44 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 163.23 புள்ளிகள் குறைந்து 37,877.34 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 35.65 புள்ளிகள் இறங்கி 11,178.40 புள்ளிகளில் முடிவுற்றது.