இந்த வாரம் பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் போன்றவற்றை கவனிச்சுகோங்க.. பங்குச் சந்தை நிபுணர்கள் அட்வைஸ்

இந்த வாரம் பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் போன்றவற்றை கவனிச்சுகோங்க.. பங்குச் சந்தை நிபுணர்கள் அட்வைஸ்

இந்த வாரம் பேங்க் ஆப் பரோடா, டைட்டன் கம்பெனி, பி.பி.சி.எல்., ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் என்.டி.பி.சி., எய்ஷர் மோட்டார்ஸ் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டி விட்டது. கொரோனா இடர்பாடு தொடருகிறது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொடர்பான வழக்கு விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது.

இந்த வாரம் பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் போன்றவற்றை கவனிச்சுகோங்க.. பங்குச் சந்தை நிபுணர்கள் அட்வைஸ்

கடந்த ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம், ஜூன் மாத தொழில்துறை உற்பத்தி மற்றும் கடந்த ஜூலை மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் முறையே வரும் 11,12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட், வழங்கிய கடன் குறித்து புள்ளிவிவரம் மற்றும் ஆகஸ்ட் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த டேட்டா ஆகியவை வரும் 14ம் தேதி வெளியாகிறது.

இந்த வாரம் பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் போன்றவற்றை கவனிச்சுகோங்க.. பங்குச் சந்தை நிபுணர்கள் அட்வைஸ்

கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்த்து போராட அமெரிக்க மக்களுக்கு கடந்த மே மாதத்தில் சுமார் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பில் நிதிதொகுப்பை அந்நாட்டு அரசு நிறைவேற்றியது. தற்போது இரண்டாவது கட்ட நிதிதொகுப்பு தொடர்பாக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வரும் வாரத்தில் இது தொடர்பான முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் போன்றவற்றை கவனிச்சுகோங்க.. பங்குச் சந்தை நிபுணர்கள் அட்வைஸ்

இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆகையால் மேற்கண்ட காரணிகளை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.