2020 : கொரோனாவை ஒழிக்க இந்தியா செய்த அட்ராசிட்டிகள்!

 

2020 : கொரோனாவை ஒழிக்க இந்தியா செய்த அட்ராசிட்டிகள்!

உலகையே அச்சுறுத்தும் கொரோனா சென்ற ஆண்டின் டிசம்பரில் சீனாவில் உருவானது. ஆனால், இந்தியாவில் இதன் தாக்கம் மார்ச் முதல் வாரத்திலிருந்துதான் அதிகம் தென்பட்டது. அதனால், இந்திய அரசு பல முறைகளில் கொரோனா ஒழிக்க திட்டங்கள் தீட்டியது. பல திட்டங்கள் நல்லவையே. ஆனால், சில திட்டங்கள் கிண்டல் செய்யப்பட்டன. அப்படியான அட்ராசிட்டிகளைப் பார்ப்போம்.

கொரோனா அண்டை நாடுகளில் பாதித்ததும் அதை தடுக்க, மாதக்கணக்கில் ஊரடங்கு தேவை என்று தெரிந்தும், மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவித்தார்கள். ஏதோ பாரத் பந்த் போல. அதற்கும் சிலர் தொடர்ச்சியாக 10 மணி நேரம் வெளியே இல்லாட்டி கொரோனா கோபிச்சிட்டு போயிடும் என்பதுபோல விளக்கம் கொடுத்தார்கள். அதை விட கிண்டல் செய்யப்பட்ட விஷயம், மாலையில் வெளியே வந்து கைத்தட்ட வேண்டும் என்பது. அதையும் கூட்டம் கூட்டமாக நின்று கைத்தட்டி பண்டிகை கொண்டாட்டமாக மாற்றினர்.

2020 : கொரோனாவை ஒழிக்க இந்தியா செய்த அட்ராசிட்டிகள்!

இன்னும் பலர் என்ன செய்தார்கள் தெரியுமா… தாம்பாளம் ஒரு கையில், கரண்டி மறுகையில். கரண்டியால் தாம்பாளத்தைத் தட்டி தட்டி கோ கொரோனா கோ கொரோனா எனப் பாட்டெல்லாம் பாடினார்கள். அடுக்கு மாடி குடியிருப்புகளில் கூட்டமாக கூடிநின்று மனி அடித்து கொரோனா கொண்டாட்டம் அரங்கேறின.

இதைவிட ஹை’லைட்’டாக அடுத்தது நடந்தது. ஏப்ரல் 3-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்சார விளக்குகளை அணைத்து, அகல் விளக்கு, டார்ச் லைட்டுகளை எரியச் செய்யுங்கள் என்பதுதான். இருட்டைக் கண்டால் கொரோனா பயந்து ஓடிவிடும் என்றெல்லாம் சிலர் விளக்கினார். இன்னும் சில ஜோதிடர்களோ அந்த நேரத்தில் நட்சத்திரப் பலன்களை எல்லாம் சொன்னார்கள். ஆனால், நடந்ததோ, கூட்டம் கூட்டமாக தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் போனார்கள். இதோ என் வாடிக்கையாளர்கள் என கொரோனா தொற்றிக்கொண்டது. மீம்ஸ் ரெடி செய்வோர்களுக்கு செம வேட்டைதான்.

2020 : கொரோனாவை ஒழிக்க இந்தியா செய்த அட்ராசிட்டிகள்!

இவை தவிர, சீனாவிலிருந்து வந்த வைரஸ் என்பதால், சீன நிறுவனத்தின் டிவியை உடைக்கிறேன் என்று கொரியா நாட்டு டிவியை உடைத்த கதை தனிக் கதை. அது சிரித்து மாளாது.

இன்னும் சில பாஜகவினர் மாட்டு கோமியம்தான் கொரோனாவுக்குத் தீர்வு என அடித்துக்கூறினர். ஆனால், அவர்களுக்கே கொரோனா தாக்கி மருத்துவமனைக்குச் சென்றதுதான் கதையின் துயரமே.

2020 : கொரோனாவை ஒழிக்க இந்தியா செய்த அட்ராசிட்டிகள்!

இப்போதும் முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்கூட மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே என்ன சொன்னார் தெரியுமா? “மார்ச் மாதம் கோ கொரோனா என்று சொன்னாம் அதனால், அது ஓடி விட்டது. இப்போது புதிய வகை கொரோனா வைரஸ்க்கு நோ கொரோனா என்று சொல்லுங்கள் போய்விடும்” என்று சொல்லியிருக்கிறார். அப்படின்னா, இவ்வளவு கஷ்டப்பட்டு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதெல்லாம் வேண்டாத வேலையா?

கொரோனாவை ஒழிக்க ஆரோக்கியமாக நல்ல முயற்சி எடுத்தவர்களுக்கு நம் சல்யூட். ஆனால், அதையே இப்படி காமெடியாக்கியவர்களை என்னதான் சொல்வது?