கடந்த நிதியாண்டில் கார் விற்பனையில் சறுக்கிய மாருதி.. மகிந்திராவை குஷி படுத்திய டிராக்டர் விற்பனை

கடந்த நிதியாண்டில் கார் விற்பனையில் சறுக்கிய மாருதி.. மகிந்திராவை குஷி படுத்திய டிராக்டர் விற்பனை

கடந்த நிதியாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை சரிவு கண்டுள்ளது. அதேசமயம் மகிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 1.67 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 83,792 கார்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. அந்த மாதத்தின் இறுதியில் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தியதே இதற்கு முக்கிய காரணம்.

கடந்த நிதியாண்டில் கார் விற்பனையில் சறுக்கிய மாருதி.. மகிந்திராவை குஷி படுத்திய டிராக்டர் விற்பனை
மாருதி சுசுகி இந்தியா

2020-21ம் நிதியாண்டில் (2020 ஏப்ரல்-2021 மார்ச்) மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 14.57 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2019-20ம் நிதியாண்டைக் காட்டிலும் 6.7 சதவீதம் குறைவாகும். அந்த நிதியாண்டில் மொத்தம் 15.63 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது. லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகளுடன் உடைய லாக்டவுன் தளர்வு காலத்தில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் கார் விற்பனையில் சறுக்கிய மாருதி.. மகிந்திராவை குஷி படுத்திய டிராக்டர் விற்பனை
மகிந்திரா டிராக்டர்

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 30,970 டிராக்டர்களை விற்பனை செய்து உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 128 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் மாதத்தில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் மொத்தம் 13,613 டிராக்டர்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. 2020-21ம் நிதியாண்டில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 17.4 சதவீதம் உயர்ந்து 3.54 லட்சம் டிராக்டர்களாக உயர்ந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 3.01 லட்சம் டிராக்டர்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.