2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.11.36 லட்சம் கோடி.. மார்ச் மாதத்தில் வசூலில் புதிய சாதனை

 

2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.11.36 லட்சம் கோடி.. மார்ச் மாதத்தில் வசூலில் புதிய சாதனை

2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ.11.36 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.23 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் குறைந்தது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் மிகவும் குறைந்தது.

2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.11.36 லட்சம் கோடி.. மார்ச் மாதத்தில் வசூலில் புதிய சாதனை
ஜி.எஸ்.டி.

கடந்த அக்டோபர் முதல் கடந்த மார்ச் வரை ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. யாக ரூ.1.23 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ.11.36 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகியுள்ளது.

2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.11.36 லட்சம் கோடி.. மார்ச் மாதத்தில் வசூலில் புதிய சாதனை
ஜி.எஸ்.டி.

2020 ஏப்ரல் ரூ. 32,294 கோடி
மே ரூ. 62,009 கோடி
ஜூன் ரூ. 90,917 கோடி
ஜூலை ரூ. 87,422 கோடி
ஆகஸ்ட் ரூ. 86,449 கோடி
செப்டம்பர் ரூ. 95,480 கோடி
அக்டோபர் ரூ.1,05,155 கோடி
நவம்பர் ரூ.1,04,963 கோடி
டிசம்பர் ரூ.1,15,174 கோடி
2021 ஜனவரி ரூ.1,19,847 கோடி
பிப்ரவரி ரூ.1,13,143 கோடி
மார்ச் ரூ.1,23,902 கோடி

   மொத்தம்  ரூ.11,36,755 கோடி