2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்

 

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்
குரு பார்வை கிடைத்தால் கோடி நண்மைகள் வந்து சேரும் என்பார்கள். குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடப் பெயர்ச்சி ஆவார். அந்த வகையில் இந்த ஆண்டு, வாக்கியப் பஞ்சாங்கப்படி வரும், 2020 நவம்பர் மாதம் 15-ம் தேதி, இரவு 2.55- மணிக்கு, அதாவது ஐப்பசி மாதம் 30-ம் தேதி குரு பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 2020 நவம்பர் 20-ம் தேதி, அதாவது கார்த்திகை மாதம் 5-ம் தேதி குருபெயர்ச்சி நிகழ்கிறது. இந்தக் குரு பெயர்ச்சியால் 8 ராசிக்காரர்கள் மிகப் பெரிய நண்மையும், யோகமும் அடையப் போகிறார்கள். அவர்கள் யார்.யார்..? என்பதைப் பார்க்கலாம்.

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


1.மீன ராசி அன்பர்களே! குரு பகவான் முதலில் அள்ளித் தரப் போவது உங்களுக்குத்தான். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாக இருக்கும். திடீர் ஆதாயங்களும், எதிர்பாராத பண வரவுகளும் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்வீர்கள். குடும்பத்திலும், அலுவலகத்திலும் நல்ல பெயர் கிட்டும்..வேலை விஷயத்தில் நீங்கள் எடுத்த காரியம் எல்லாம் ஜெயிக்கும். மொத்தத்தில் உங்களுடைய பல கனவுகள் நிறைவேறுவதற்கு, இது சரியான காலம் என்று சொல்லலாம். உங்களுடைய ராசி பலன் மதிப்பெண் 85

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


2.தனுசு ராசி அன்பர்களே!, இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நிறைய யோகங்களை அள்ளித் தரப் போகிறது. வேலை, தொழில், வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கப் போகிறீர்கள்.கடன் பிரச்சனைகள் தீர்ந்து செல்வச் செழிப்பு அடையப் போகிறீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பிறக்கும். சுப காரியங்கள் நடக்கும். பொன், பொருள் வாங்குவீர்கள். பிறர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் நலன் சீரடையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய ராசி பலன் மதிப்பெண் 80

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


3.ரிஷப ராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு உங்களுக்கு சில அதிர்ஷ்டங்களையும் முன்னோர்களின் ஆசிகளையும் வழங்குவார்.. இது வரை இருந்த பணக் கஷ்டம் நீங்கி உங்கள் பொருளாதார நிலை மேம்படும். தடைகள் தவிடு பொடியாகும்.எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும்.பொன்,பொருள் சேர்க்கை, சுபாகாரியங்கள், சொந்த வீடு, வாகனம் என சகல யோகங்களையும் உஙக்ளுக்கு குரு பகவான் அள்ளித் தரப் போகிறார். உங்களுடைய ராசி பலன் மதிப்பெண் 70

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


4.கடக ராசி அன்பர்களே! குரு பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆகவே உங்களுக்கு சகலமும் யோகமாக அமையப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.வேலை, தொழிலில் சிறப்படைவீர்கள். பணப் புழக்கம் நன்றாகவே இருக்கும். வருமானம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி கிடைக்கும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.திருமண யோகம் வரும். விரைய செலவுகள் வரலாம் எச்சரிக்கை. உங்களுடைய ராசி பலன் மதிப்பெண் 65

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


5.கன்னி ராசி அன்பர்களே! குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிகிறார். இதுவரை நீங்கள் சிலவகை தோஷங்களால் பல சிரமங்களை சந்தித்து வந்திருப்பீர்கள் அவை யாவும் இனி சந்தோஷமாக மாறப்போகின்றன. தடைபட்டு வந்த அனைத்து காரியங்களும் மிக எளிதாக நடக்கப் போகின்றன. வேலை கிடைக்கும்.பதவி உயர்வு வரும் தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய வருமானம் வரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களுடைய ராசி பலன் மதிப்பெண் 60

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


6.சிம்ம ராசி அன்பர்களே !. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் விழுகிறது. உங்கள் பொருளாதார பிரச்சினைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சுப நிகழ்ச்சி நடைபெறும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலையில் இடமாற்றம்போன்றவை கிட்டும். பயணங்களில் நன்மை கிடைக்கும். சுப விரைய செலவுகள் வரும் குடும்பம் குதூகலமாக இருக்கும். எதிர்பாராத யோகம் வரும். உங்களுடைய ராசி பலன் மதிப்பெண் 55

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


7.விருச்சிக ராசி அன்பர்களே.. குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வரப் போகிறார். நீங்கள் மிகப் பெரிய அளவில் உயரப் போகிறீர்கள். வேலை, தொழிலில் சிறக்கப் போகிறீர்கள். கடன் பிரச்சினை, சொத்து பிரச்சினைகள் தீரும்.சில விஷயங்கள் இழுபறியுடன் நடந்து முடியும். தாராளமான பண வரவு கிடைக்கும். காரியத் தடைகள் நீங்கும். சுப காரியங்கள் கை கூடி வரும். பண விசயத்தில் ஏமாற வாய்ப்பிருக்கிறது கவனம் தேவை. உடல் நிலையிலும் சற்று கவனம் தேவை. உங்களுடைய ராசி பலன் மதிப்பெண் 55

2020-2021 குரு பெயர்ச்சி: ‘ராஜ யோகம்’ பெறப் போகும் 8 அதிர்ஷ்ட ராசிகள்


8.துலாம் ராசி அன்பர்களே! குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8-ம் வீடு, 10-ம் வீடு, 12-ம் வீட்டில் விழுகிறது. இந்தக் குரு பார்வையால் உங்களுடைய தோஷங்கள் நீங்கும் பொருளாதாரத்தில் உயர்வீர்கள். எதிர் பாராத லாபங்கள் வந்து சேரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்..வேலை மற்றும் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.சுப விரைய செலவுகள் வரும். மனக் குழப்பங்கள் தீர்ந்து எடுத்த காரியங்களை இனிதே செய்து முடிப்பீர்கள். உங்களுடைய ராசி பலன் மதிப்பெண் 50.
“டாப் தமிழ் நியூஸ்” செய்திகளுக்காக இர. சுபாஸ் சந்திர போஸ்