2020-ல் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு இன்பச் சுற்றுலா – அம்பானி ஆரம்பிக்கிறவரை காத்திருப்போம்!

 

2020-ல் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு இன்பச் சுற்றுலா – அம்பானி ஆரம்பிக்கிறவரை காத்திருப்போம்!

சர்வதேச விண்வெளி போக்குவரத்துக்கான ஸ்பெஷல் ராக்கெட்களையும், கேப்சூல்களையும் போயிங்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. நினைத்தபோதெல்லாம் அங்கே போய் இறங்கிவிட முடியாதாம். சீசனை பொறுத்துத்தான். அடுத்த ஆண்டு முதல் சுற்றுலா பயணம் துவங்கக்கூடும். ஒரு இரவுக்கு 24 லட்சம் ரூபாய் கட்டணம்.

அந்தரத்தில் செயல்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்க, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிதிஉதவி இருந்தாலும், அமெரிக்காவின் பங்கு சற்றே கூடுதல். ட்ரம்ப் அதிபரானவுடன், ”அதெல்லாம் தண்ட செலவு, அதுக்கெல்லாம் இனிமேல் காசு குடுக்க முடியாது, அதிகபட்சம் 2025 வரைதான், அதுக்கப்புறம் அது உங்க தலைவலி” என ஒரே போடாக போட்டுவிட்டார். அந்தரத்தில் நட்டாத்தில் விட்டுவிட்ட மாதிரி ஃபீலிங்கில் இருந்த நாசா, என்ன செய்வதென்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆமாம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று அதன்மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு சொந்தக்காலில் நிற்க முடிவு செய்திருக்கிறது.

International Space Station tourism

சர்வதேச விண்வெளி போக்குவரத்துக்கான ஸ்பெஷல் ராக்கெட்களையும், கேப்சூல்களையும் போயிங்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. நினைத்தபோதெல்லாம் அங்கே போய் இறங்கிவிட முடியாதாம். சீசனை பொறுத்துத்தான். அடுத்த ஆண்டு முதல் சுற்றுலா பயணம் துவங்கக்கூடும். ஒரு இரவுக்கு 24 லட்சம் ரூபாய் கட்டணம். நமக்கு அவ்ளோ எல்லாம் கட்டுப்படியாகாது. கொஞ்சநாள் வெய்ட் பண்ணினா நம்ம முகேஷ் அம்பானிஜி, அன்லிமிட்டட் ஸ்பேஸ் ட்ரிப் ப்ளான் ஒண்ணு கொண்டுவருவாப்டி, அப்ப பாத்துக்கலாம்.