2020 ஏப்ரலில் வருது தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு…

 

2020 ஏப்ரலில் வருது தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு…

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2020 ஏப்ரலில் இந்த பணிகள் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது நம் நாட்டில் குடியிருப்போர் தொடர்பான  விவரங்களை பராமரிப்பதுதான். 2010ம் ஆண்டில் முதல்முறையாக தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறைக்கு வந்தது. நாட்டின் வழக்கான ஒவ்வொரு குடியிருப்பாளரின் விரிவான அடையாளங்களுடன் கூடிய தகவல் தளத்தை உருவாக்குவதே இந்த தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் நோக்கம். கடைசியாக 2015ல் தேசிய மக்கள்தொகை பதிவேடு பதிவு நடந்தது.

மக்கள்

இந்நிலையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.3,900 கோடி செலவில் இந்த பணிகள் நடைபெற உள்ளது. 2020 ஏப்ரலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து தேசிய மக்கள்தொகை பதிவேடு பதிவு நடைபெற உள்ளது. 

தேசிய மக்கள்தொகை பதிவேடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பும்கான தகவல்கள் ஒரே கணக்கீட்டாளரால், ஆப் வாயிலாக அல்லது எழுத்துப்பூர்வமாக சேகரிக்கப்படும். ஒவ்வொரு வழக்கான இந்தியரும் இந்த பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகளின் போது, முதல் முறையாக வழக்கான குடியிருப்பாளரின் பிறப்பு நாள், பிறந்த இடம், குடியிருப்பாளரின் அம்மா மற்றும் அப்பா குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படும். மேலும் அவரது ஆதார் எண் மற்றும் பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஒட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்படும்.