2020 டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கப்போவது இந்த அணி தான் – முன்னாள் ஜாம்பவான் கணிப்பு!

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப் போவது இந்த அணிதான் என கண்டித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

2020 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடர் வரவிருக்கிறது. இத்தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தற்போது இருந்தே தயார் செய்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப் போவது இந்த அணிதான் என கண்டித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

2020 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடர் வரவிருக்கிறது. இத்தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தற்போது இருந்தே தயார் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் பல புது வீரர்களை அணியில் பயன்படுத்தி அவர்களின் செயல்பாடுகளை கவனித்து வருகிறது. 

t 20

மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புதிதாக இளம் வீரர் சிவம் துபெ, சஞ்சு சாம்சன் ஆகியோரும், வேகப்பந்து வீச்சில் கலீல் அகமது, தீபக் சஹர் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 

சுழல் பந்து வீச்சில் இளம் வீரர் ராகுல் சஹாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு குல்தீப் யாதவ் வெளியேற்றப்பட்டார். இப்படி ஒவ்வொரு தொடரிலும் புதிய வீரர்களை பயன்படுத்தி அவர்களின் முழு செயல்பாடுகளை கிரிக்கெட் வாரியம் கவனித்து வருகிறது. 

இதற்கிடையே 2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வெல்ல இந்த இரு அணிகள் தான் சரியாக இருக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது கணிப்பினை தெரிவித்துள்ளார். அதில் முதலாவதாக, ஆஸ்திரேலிய அணி வெல்லும் என கணித்துள்ளார். அண்மையில், ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளையும் துவம்சம் செய்து அபார வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

michael vagan

அதற்கு அடுத்ததாக இங்கிலாந்து அணி வெல்லும் என தனது கணிப்பில் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. அதில் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபாரமாக வென்றது. இதன் அடிப்படையாக தனது கணிப்பில் அவர் தெரிவித்திருக்கிறார்.

முதலில் இந்திய அணியை தனது கணிப்பில் வைத்திருந்ததாகவும், தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடரில் இந்தியா தடுமாறி வருவதால் முடிவை மாற்றிக் கொண்டதாகவும் மைக்கேல் வாகன் குறிப்பிட்டார்.
 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....