நோட்டோவுக்கு கூட ஆயிரத்துக்கு மேல்…நடிகர் மன்சூர் அலிகானுக்கு வெறும் 201 தான்!

 

நோட்டோவுக்கு கூட ஆயிரத்துக்கு மேல்…நடிகர் மன்சூர் அலிகானுக்கு வெறும் 201 தான்!

நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த முறை திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் மன்சூர் அலிகான், இந்த முறை தேர்தல் சமயத்தில் நாம் தமிழரில் இருந்து விலகினார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அவர் சுயேட்சையாக களமிறங்கினார்.

நோட்டோவுக்கு கூட ஆயிரத்துக்கு மேல்…நடிகர் மன்சூர் அலிகானுக்கு வெறும் 201 தான்!

அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இத்தொகுதியில் 85,209 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதற்கு அடுத்தபடியாக 55,719 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இதுவரை நடந்துள்ள 16 சுற்றுகள் முடிவுகளின் படி மன்சூர் அலிகானுக்கு வெறும் 201 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. நான்காவது இடத்தில் நாம்தமிழர் கட்சி இருக்கும் நிலையில், ஐந்தாம் இடத்தில் நோட்டோ இருக்கிறது. 1134 வாக்குகள் நோட்டோவுக்கு கிடைத்திருக்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் அமமுக வேட்பாளர் உள்ளார். ஆக கடைசியில் இருக்கும் மன்சூர் அலிகான் வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என்பது உறுதி்யாகிறது.

நோட்டோவுக்கு கூட ஆயிரத்துக்கு மேல் கிடைத்திருக்கும் நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு வெறும் 201 தான்! என்கிற போது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.