• February
    21
    Friday

Main Area

Main



ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு கடந்த செப்டம்பர் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டது. அந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவு கண்டு வருவதால் அது பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் டிசம்பர் இந்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு முறை கடனுக்கான வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து இருப்பது சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் அமெரிக்கா-சீனா இடையிலான உறவு பதற்றமான நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்கா-சீனா பதற்றம்

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.