2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்…!

 

2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்…!

 யுகபாரதி வரிகளில்  அமைந்த இந்த பாடல் நிச்சயம் கேட்பவர் கண்களில் கண்ணீரை வரவைத்தது எனலாம்.

2019 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 200 படங்கள் வெளியாகின.  அதில் பெற்றிருந்த பல பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை திரும்ப திரும்ப கேட்டு குதூகலிக்கும் வகையில் சில பாடல்கள் அமைந்து யூட்யூப் போன்ற  தளங்களில் டிரெண்டாகியது. அவற்றை பற்றிய ஒரு தொகுப்பினை இந்த செய்தியில் காணலாம்.

கண்ணான கண்ணே –  விஸ்வாசம் 

ttn

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில்  வெளியான விஸ்வாசம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பியது.குடும்ப படமான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளமாக இருந்தது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் அப்பா -மகள் இடையேயான உறவை பிரதிபலிக்கும்  வகையில் அமைந்திருந்தது. இதில் பெண் பிள்ளைகள் இருக்கும்  அப்பாக்கள் இந்த பாடலை தங்கள் ரிங்க்டோனாகவும், காலர்டோனாகவும் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

சிங்கப்பெண்ணே – பிகில் 

ttn

தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்த திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம்  தயாரித்த இந்த படத்தில் நயன்தாரா,நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் பல பெண்களுக்கு உத்வேகம் கொடுத்தது எனலாம். 

கோடி அருவி கொட்டுதே -மெஹந்தி சர்க்கஸ்

ttn

கோடி அருவி கொட்டுதே பாடல்  யுகபாரதியின் வரிகளில் இந்த வருடம் வெளியான பாடல்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. காரணம்  அருமையான மெல்லிசை, அழகான காதல் காட்சிகள் என  இளசுகளின் மனதில் ஊடுருவி அவர்களின்  பேவரைட் பாடலாக மாறியுள்ளது.

எள்ளு வய பூக்கலையே – அசுரன் 

 

ttn

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இந்த வருடத்தில் வெளியான படங்களில் முக்கிய இடம் கண்டிப்பாக அசுரன் படத்துக்கு உண்டு.  ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி இணைந்த பாடலான எள்ளு வய பூக்கலையே வேற லெவல்.  யுகபாரதி வரிகளில்  அமைந்த இந்த பாடல் நிச்சயம் கேட்பவர் கண்களில் கண்ணீரை வரவைத்தது எனலாம்.

மரணம், மாஸு மரணம் – பேட்ட 

ttn

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மீண்டும் 80, 90 காலகட்டத்தில் பார்த்தது போன்ற அனுபவத்தைக் கொடுத்த படம் பேட்ட. அனிருத் இசையில் இந்த அமைந்த அனைத்து  பாடல்களும் ஹிட்டான நிலையில்,  மரணம், மாஸு மரணம் பாடல் ஒருபடி மேலாகவே சென்று  மாஸாக இருந்தது. 

தாரமே தாரமே – கடாரம் கொண்டான்

ttn

விக்ரம் , அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான  கடாரம் கொண்டான் படத்தில் இடம்பிடித்த தாரமே தாரமே பாடல் இந்த வருடத்தின் காதல் பாடல்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஜிப்ரான் இசையில்  சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் டிக் டோக்கை  ஆக்கிரமித்தது. 

 

கண்ணம்மா உன்ன –  இஸ்பேட் ராஜாவும், இதயராணியும்

ttn

இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில்  இடம்பெற்ற கண்ணம்மா உன்ன பாடல் இந்த ஆண்டு செம்ம ஹிட் அடித்தது. சாம் இசையில் அனிருத் பாடிய இந்த பாடலை முணுமுணுக்காத இளைஞர்களே இல்லை எனலாம்.