2019 ரீவைண்ட்: டாப் வசூலில் ரஜினி, அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்

 

2019 ரீவைண்ட்: டாப் வசூலில் ரஜினி, அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்

பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வர்த்தக ரீதியாக இது உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.  

பாக்ஸ் ஆபிஸைப் பொறுத்தவரை பாலிவுட் மற்றும் கோலிவுட் உள்ளிட்ட இந்திய திரையுலகிற்கு 2019 ஆம் ஆண்டு மிகவும் லாபகரமான ஆண்டாக மாறியுள்ளது. குறிப்பாக கோலிவுட், அதாவது தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டில் நல்ல லாபம் கிடைத்துள்ளது எனலாம்.

tn

இதில் தளபதி  விஜய்யின் பிகில் அதிகபட்ச வரவேற்பை  பெற்றது. தீபாவளியின் போது அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் திரைப் படத்துடன் வெளியான தளபதி  விஜய்யின் பிகில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வர்த்தக ரீதியாக இது உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.  

ttn

இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜின் இயக்கத்தில்  உச்ச நடிகர் அந்தஸ்தில் உள்ள நடிகர்  ரஜினிகாந்தின்  நடிப்பில் வெளியான பேட்ட உலகளவில் 250 கோடியைத் தாண்டியது.

ttn

தல அஜித் நடிப்பில் இந்தாண்டு வெளியானது விஸ்வாசம் மற்றும்  நேர்கொண்ட பார்வை. இந்த இரண்டு படங்களும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் முறையே 201 கோடி மற்றும் 108 கோடி என இந்த இரண்டு படங்களும்  வசூலை அள்ளியது. 

ttn

ராகவா லாரன்ஸின் திகில் நகைச்சுவை படமான  காஞ்சனா 3 திரைப்படம்  100 கோடிக்கு மேல் சம்பாதித்தது.

ttn

தனுஷின் அசுரன் மற்றும் கார்த்தியின் கைதியும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியைத் தாண்டின. 

ttn

வர்த்தக ரீதியாக  கோலிவுட் வசூல் நிலவரம் இந்தாண்டு 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதற்கிடையில், அஜித்தின்  ‘விஸ்வாசம்’ படத்தை வீழ்த்தி விஜய்யின் பிகில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படமாக திகழ்கிறது.

ttn

பிகில் தனது நான்காவது வார இறுதி சினிமாக்களின் முடிவில் 141.05 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அஜித்தின் ‘விஸ்வாசம்’ தமிழகத்தில் சுமார் 140 கோடி ரூபாய் வசூலித்ததாக சினிமா  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் ரூ .200 கோடி வசூலான திரைப்படம் என்ற பெருமையை பிகில் பெற்றுள்ளது. ரஜினிகாந்த், பிரபாஸ் மற்றும் யஷ் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை வென்ற நான்காவது நடிகர் விஜய் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார்.