2019- முக்கிய நிகழ்வுகள்… சின்னதாக ரீவைண்ட்…

 

2019- முக்கிய நிகழ்வுகள்… சின்னதாக ரீவைண்ட்…

ஜனவரி 2019

India-won-test-series

01- தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குத் தடைவிதித்தது.

03- சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து சபரிமலையில் இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசித்ததால் கேரளாவில் பெரும் கலவரம் நடந்தது. 100 பேருந்துகள் உடைக்கப்பட்டன். 2 பேர் இறந்தனர்.

07- வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அதே நாளில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு பழைய கிரிமினல் வழக்கில் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் பதவி பறிக்கப்பட்டது.

15- இந்தியாவின் மிகப்பெரிய கும்பமேளா அலகாபாத் நகரில் துவங்கியது.

24- வருமானவரி, சொத்துவரி கட்டாததால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், உள்ளிட்ட மேலும் சில சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.

29- முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்தார்.

31- கட்டாய கல்விச்சீர்திருத்த சட்டத்தின்படி 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

பிப்ரவரி 2019

Pulwama-Attack

01- மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 5 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது.

06- காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றார்.

08- உத்திரப்பிரதேச மாநிலத்தில் யானை சிலைகள் வைக்க செலவிட்ட பணத்தை திரும்ப செலுத்தும்படி மாயாவதிக்கு நீதிமன்றம் உத்தரவு.

14- காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அவந்திப்போரா எனும் இடத்தில் நெடுஞ்சாலையில் போய்க்கொண்டு இருந்த துணை ராணுவப்படை வாகனத்தின் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

21- வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள 300 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்ரமித்த விவகாரத்தில் அமைச்சர் கே.சி வீரமணி வீடு உட்பட 31 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

25- 91 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. பொஹீமியன் ராப்சோடி என்கிற திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது. கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரைப் பற்றிய, பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் என்கிற ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது.

27- பால்கோட் தீவிரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாகுதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின்போது சென்னையைச் சேர்ந்த அபிநந்தன் என்கிற விமானியை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது.

மார்ச் 2019

Feb-events

01- சிறைப்பிடிக்கப்பட்ட விமானி அபிநந்தனை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.

06- பொள்ளாச்சியில் இளம் பெண்களை 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த நால்வரை போலீஸ் கைது செய்தது.

10- நடிகர் ஆர்யா- சாயிஷா திருமணம் நடந்தது.

17- பிரதமர் மோடி டிவிட்டரில் தனது பெயரை ‘செளகிதார்’ நரேந்திர மோடி என்று மாற்றிக்கொண்டார்.

20- பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி மோசடி செய்து லண்டனுக்குத் தப்பி ஓடிய நீரவ் மோடி கைது.

27- தைபேவில் நடந்த 12 வது ஆசிய ஏர்-கன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மானுபேக்கர்- சவுரவ் சவுத்ரி இணைப் உலகசாதனை நிகழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

30- கொலைவழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியது.

ஏப்ரல் 2019

April events

2 முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள் படங்களை இயக்கிய மகேந்திரன் காலமானார்.

08 சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப் படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணயை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

21 இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது 8 இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடி குண்டுத்தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டனர். பழைமையான தேவாலயம் கடும் சேதமடைந்தது.

23- கத்தாரில் நடைபெற்ற 23-வது ஆசிய தடகளப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

30- புதுச்சேரி அரசின் நிர்வாகத்தில் தலையிட துணை நிலை ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மே 2019

Pray-for-nesamani

01- நரு ஹிட்டோ ஜப்பானின் 126-வது மன்னராக பொறுப்பேற்றார்.

05- அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் கேம்பெல் – ஹோப் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 365 ரன் குவித்து உலக சாதனை.

10- சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைந்தார்.

20- உக்ரைன் அதிபர் தேர்தலில் டி.வி சீரியல் காமெடி நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்றார்.

23- தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வென்றன.
பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டனி 37 இடங்களை பிடித்தது.அதிமுக தேனியில் மட்டும் வென்றது.

30- மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதே நாளில், ‘ப்ரே ஃபார் நேசமணி’ என்கிற வடிவேலு படக்காமெடி ஹேஸ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆனது.

ஜுன் 2019

athi-varadhar

01- இந்தி பேசாத மாநிலங்களில் ஆறாம் வகுப்பு முதல் இந்தி கட்டாயம் என்ற் கஸ்த்தூரி ரங்கன் கமிட்டி ஆலோசனைக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழ்ந்தது.இந்தி கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது.

10- கிரேசி தீவ்ஸ் இன்பாலவாக்கம் முதல் சாக்லெட் கிருஷ்ணா வரை பல மேடை நாடகங்களை எழுதியவரும்,பிரபல சினிமா வசனக்கர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.

17- முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா பிஜேபியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

21- தெலுங்கானாவில் 80 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட காலேசுவரம் பல்அடுக்கு நீர்பாசன திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது.

26- மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி செய்யும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.

27-  ‘எலந்தப்பழம்’ பாடல் புகழ் நடிகையும் 44 படங்களை இயக்கியவருமான நடிகை விஜய நிர்மலா மரணம்.

28- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்த சரஸ் குளத்தில் நாற்பது ஆண்டுகளாக வைக்கப்படு இருந்த அத்திவரதர் வெளியே வந்தார்.

30- வடகொரிய எல்லையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்பும்,வடகொரியா அதிபர் கிம் ஜங் உன் சந்தித்தனர்.

ஜூலை 2019

Triple-talaq-05

04- திமுக இளைஞர் அணி செயலாளர் ஆனார் உதயநிதி ஸ்டாலின்.

06- இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சதமட்டித்ததன் மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் ஆறு சதங்கள் அடித்தவர் என்கிற பெருமையை அடைந்தார் ரோகித் ஷர்மா.

14- லண்டனில் நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்தை வென்று முதல் முறையாக ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து. 

18- அத்திவரதர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் நான்கு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

23- நெல்லையின் முன்னாள் மேயரான உமா மகேசுவரி, அவரது கணவர்,மற்றும் பணிப்பெண் மூவரும் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.

30- எதிர் கட்சிகளின் தீவிர எதிர்ப்பை மீறி மாநிலங்கள் அவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 2019

ilavenil-valarivan

01- ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

05- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை நீக்கப்பட்டது. காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

06- முன்னாள் மத்திய அமைச்சரும்,பிஜேபியின். முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் மரணம்.

15- வெஸ்ட் இண்டீசில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிகெட் அணி,டி20 தொடருடன்,ஒருநாள் போட்டித் தொடரையும் வென்றது.

21- ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது.

24- டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்.

29- பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார்.

31- அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் சேர்க்கப்படாத 19 லட்சம் பேருக்கு 6 மாத கெடு விதிக்கப்பட்டது.

செப்டம்பர் 2019

vikram-lander

06- நிலவின் தரைப் பகுதியை நெருங்கிய நிலையில் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

08- முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மரணம்
தெலங்கானா கவர்னராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.

14- வங்கதேசத்தை 5 ரன் வித்தியாசத்தில் வென்று ஆசியக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா.

24- அமிதாப் பச்சனுக்கு தாதாசாகெப் பால்கே விருது வழங்குவதாக அறிவிப்பு வெளியானது.

30- ஆந்திராவில் ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு அரசு பணியாணை வழங்கினார் முதல்வர் ஜெகன் மோகன்.

அக்டோபர் 2019

lalitha-jewellery-robbery

01- திருச்சி லலிதா ஜுவல்லரியின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு 13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை.

08- ஃபிரான்ஸ் அரசு முதல் ரஃபேல் விமானத்தை முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைத்தது.

11- உலகப்புகழ்பெற்ற சாக்ஸஃபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் மரணம்.

14- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ( பிசிசிஐ )/ தலைவராக முன்னாள் இந்திய அணிக் கேப்டன் சவுரவ் கங்குலி நியமனம்.

22- தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் ,இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

28- சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனாக இருந்த அபூபக்கர் அல் பாக்தாதி இறந்து போனதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

நவம்பர் 2019

ayodhya-judgement

07- கோவையில் அக்கா தம்பி ஆகிய இரு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்.

09- அயோத்தியில் பல காலமாக இழுபறியாக இருந்த ராம ஜென்மபூமி வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமும் இந்துக்களுக்கு சொந்தம்.அங்கு ராமர் கோயில் கட்டலாம் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

18- இலங்கை அதிபராக கோத்தபாய ராஜபக்ச பதவி ஏற்றார்.

20- கோவாவில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

28- மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார்.

டிசம்பர் 2019

wall-collapse

01- மேட்டுப்பாளையத்தில் 22 அடி உயரச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி.

04- நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வு.கிலோ 200 ரூபாயைத் தாண்டியது

06- ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை வன்புணர்வு செய்து கொன்றதாக கைதான நால்வர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

08- டெல்லி அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் மூச்சுத்திணறி மரணம்.

12- இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை பிடித்தது.

18- இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது சூல் நாவ்லுக்காக சோ.தருமனுக்கு வழங்கப்பட்டது.

14- வங்கதேசத்தை 5 ரன் வித்தியாசத்தில் வென்று ஆசியக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா.

29- தாதாசாகெப் பால்கே விருது வழங்கும் விழா கடந்த 24-ம் தேதி நடை பெற்றது .உடல் நல குறைபாட்டால்  அமிதாப் பச்சன்  அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.அந்த விருதை இன்று பெற்றுக்கொண்டார்.

30- ஆந்திராவில் ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு அரசு பணியாணை வழங்கினார் முதல்வர் ஜெகன் மோகன்.