2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்படுகிறது கூகுள் பிளஸ்

 

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்படுகிறது கூகுள் பிளஸ்

சமூக வலைதளமான கூகுள் பிளஸ் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது

கலிபோர்னியா: சமூக வலைதளமான கூகுள் பிளஸ் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல தேடுபொறி ஜாம்பவானான கூகுள் நிறுவனம், கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை அறிமுகப்படுத்தியது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூடியூப் சேவைகளுடன் ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிகம் இந்த சேவையை உபயோகிக்காத பயனாளர்கள் பின்னர் அதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

எனினும், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்தியில் கூகுள் பிளஸால் போட்டியிட முடியவில்லை. இந்நிலையில் கூகுள் பிளஸ் சேவையை 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 10 மாதங்களுக்குள் பயனாளர்கள் தங்களின் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.