2019-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

 

2019-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

2019-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

சென்னை: 2019-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் புத்தாண்டு, தீபாவளி, மிலாடு நபி ஆகியவை ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றன. இரண்டு சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறை வருகிறது.

வருகிற 2019-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டை போலவே மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக வருகிறது. பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும். அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகளும் விடுமுறை நாட்கள் ஆகும்.

இதில் தமிழ் புத்தாண்டு, தீபாவளி, மிலாடு நபி ஆகியவை ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றன. இரண்டு சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறை வருகிறது. ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள்; அக்டோபர் மாதத்தில் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது விடுமுறை நாட்கள் பட்டியல் பின்வருமாறு:
 

வ.எண்        பொது விடுமுறை        தேதி              கிழமை
        1 ஆங்கில புத்தாண்டு      01.01.2019 செவ்வாய்
        2 பொங்கல்      15.01.2019 செவ்வாய்
        3 திருவள்ளுவர் தினம்      16.01.2019  புதன்
        4 உழவர் திருநாள்      17.01.2019 வியாழன்
        5 குடியரசு தினம்      26.01.2019  சனி
        6 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு
வங்கிகள் )
    01.04.2019 திங்கள்
        7 தெலுங்கு வருடப் பிறப்பு      06.04.2019 சனி
        8 தமிழ்ப் புத்தாண்டு, டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள்      14.04.2019 ஞாயிறு
        9 மகாவீர் ஜெயந்தி      17.04.2019 புதன்
       10 புனித வெள்ளி      19.04.2019 வெள்ளி
       11 மே தினம்     01.05.2019 புதன்
       12 ரம்ஜான்     05.06.2019 புதன்
       13 பக்ரீத்     12.08.2019 திங்கள்
       14 சுதந்திர தினம்      15.08.2019 வியாழன்
       15 கிருஷ்ண ஜெயந்தி      23.08.2019 வெள்ளி
       16 விநாயகர் சதுர்த்தி      02.09.2019 திங்கள்
       17 மொகரம்     10.09.2019 செவ்வாய்
       18 காந்தி ஜெயந்தி      02.10.2019  புதன்
       19 ஆயுத பூஜை      07.10.2019 திங்கள்
       20 விஜயதசமி     08.10.2019 செவ்வாய்
       21 தீபாவளி     27.10.2019 ஞாயிறு
       22 மீலாதுன் நபி      10.11.2019 ஞாயிறு
       23 கிறிஸ்துமஸ்      25.12.2019 புதன்