2019ல் ஏழுமலையான் கோவில் காணிக்கை ரூ.1,616 கோடி ! 2.79 கோடி பக்தர்கள் தரிசனம்!

 

2019ல் ஏழுமலையான் கோவில் காணிக்கை  ரூ.1,616 கோடி ! 2.79 கோடி பக்தர்கள் தரிசனம்!

2019ம் ஆண்டில் மட்டும் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆயிரத்து1, 616 கோடி ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
உலகம் முழுவதும் எத்தனை ஏழுமலையான் கோயில்கள் இருந்தாலும் பிரசித்து பெற்றதாக பக்தர்கள் அதிகம் வருவது ஆந்திரம் மாநிலம் திருப்பதி ஏழுமலைகளுக்கு நடுவே உள்ள திருமலை வெங்கடாசலபதி கோயில்தான்

2019ம் ஆண்டில் மட்டும் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆயிரத்து 1,616 கோடி ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
உலகம் முழுவதும் எத்தனை ஏழுமலையான் கோயில்கள் இருந்தாலும் பிரசித்து பெற்றதாக பக்தர்கள் அதிகம் வருவது ஆந்திரம் மாநிலம் திருப்பதி ஏழுமலைகளுக்கு நடுவே உள்ள திருமலை வெங்கடாசலபதி கோயில்தான். தங்களுக்கு அருள் கிடைக்கவும், பாவங்கள் தீரவும் கோடி கோடியாக பணமும், வைரம், தங்கம் ஆபரங்களும் காணிக்கையாக இன்றும் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.  பிரம்மோற்சவ விழா மற்றும் பவுர்ணமி கருடசேவை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றன்ர. 2019ம் ஆண்டு மட்டும் 2.79 கோடி பக்தர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
2019-ம் ஆண்டு காணிக்கையாக பெறப்பட்ட தொகை ரூ.1161 கோடியே 74 லட்சம். 12 கோடியே 49 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.6 கோடி 46 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

tirupathi tharisanam

கடந்த 2018-ம் ஆண்டு 2 கோடியே 68 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ரூ.1066 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. தற்போதைய சூழ்நிலையில் இலவச தரிசனத்திற்கு 6 மணி நேரம், ரூ.300 கட்டண தரிசனத்தில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

money donation

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. அவற்றை பக்தர்கள் முன்பதிவு செய்துகொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். கட்டண விவரங்கள் சுப்ரபாதம் ரூ.7,920, தோமாலை ரூ.140, அர்ச்சனை ரூ.140, அஷ்டதள பாதபத்மாராதனை ரூ.180, நிஜபாதம் ரூ.2,300.கல்யாண உற்சவம் ரூ.12,825, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரூ.7,425, வசந்தோற்சவம் ரூ.13,200, ஊஞ்சல் சேவை ரூ.4,050, சகஸ்ர தீபலங்கார சேவை ரூ.15,600, விசேஷ பூஜை ரூ.1,500 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.