2019ம் ஆண்டின் மிதுன ராசி புத்தாண்டு பலன்கள்!

 

2019ம் ஆண்டின் மிதுன ராசி புத்தாண்டு பலன்கள்!

மிதுன ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மிதுனம் : 

வித்யாகாரகன் புதனை ராசி நாதனாக கொண்ட மிதுன ராசி நேயர்களே . 2019 ஆம் ஆண்டு நடைபெறும் ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்களது வாழ்க்கைதரத்தினை தலை கீழாக மாற்றிவிடும் அளவிற்கு உங்களுக்கு யோகமான பலன்களை கொடுக்கும்.

mithunam

18 ஆண்டுகளுக்கு பிறகு ராகு உங்களது ராசியில் உள்ள ராகுவின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் பொழுது நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். 

இந்த வருடம் பிறக்கும் பொழுதே உங்களது தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் கண்டிப்பாக உங்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும் .

புதிய தொழில் தொடங்குவீர்கள் மேலும்  தற்பொழுது பார்த்து வரும் வேலையில் உச்சம் தொடுவீர்கள். புதிய தொழில் வாய்புகள் உருவாகும். உங்களுக்கு மிக சிறந்த வாழ்க்கை துணை கிடைப்பார்கள்.

mithunam

உங்களுக்கு இதுவரை இருந்து வந்த மனஅழுத்தம் நீங்கும். ராகு மற்றும் கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களது காதல் திருமணம் கண்டிப்பாக கை கூடும் .

பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தொய்வு நிலைமாறி முன்னேற்றம் உண்டாகும். சுப விரைய செலவுகளுக்காக  கடன் வாங்கும் காலகட்டம் இதுவாகும்.

மிதுன லக்ன பலன்கள் : மனதில் நீண்ட காலமாக இருந்து வந்த மனஅழுத்தம் குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் : வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரம் : புதிய தொழில் தேவைகள் பூர்த்தியாகும்.

mithunam

புனர்பூசம் நட்சத்திரம் : எதிர் பார்க்காத அதிர்ஷ்ட வாய்‬ப்புகள் உருவாகும்.

பரிகாரம் : கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது மிக சிறந்த பரிகாரமாகும்.