2019ம் ஆண்டின் சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள்!

 

2019ம் ஆண்டின் சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள்!

சிம்ம ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

சிம்மம் :

சூரியனை ராசிநாதனாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே . நீங்கள் எடுத்த முடிவில் தெளிவாக இருக்க கூடியவர்கள். உங்களுக்கு முன்கோபமும் பிடிவாத குணமும் உங்களுடன் கூடவே பிறந்த ஒன்றாகும். இந்த ராசிக்காரர்களாகிய நீங்கள் எல்லா விஷயங்களிலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் குணமுடையவர்கள்.

simmam

உணவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்ககூடியவர்களாக இருப்பார்கள் . 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் நல்ல பலன்களை தர கூடிய ஆண்டாக அமையும்.

சுப விரைய செலவுகள் உங்களுக்கு ஏற்படும் . இதுவரை சுப நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் . கடந்த 2014 முதல் 2018 வரை பல்வேறு இன்னல்களுக்கு ஆளான உங்களுக்கு வரவிருக்கும் 2019 ஆம் ஆண்டு கண்டிப்பாக நல்ல முன்னேற்றங்களை கொடுக்க கூடிய ஆண்டாக அமையும்.

குடும்பத்தில் இருந்து வந்த சஞ்சலங்கள் மற்றும் மனவருத்தங்கள் நீங்கிவிடும் . நீண்ட நாட்களாக இருந்து வந்த உறவு சிக்கல்கள் நீங்கிவிடும்.

simmam

இந்த வருட ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு பின்னர் உங்கள் உடல் நலனில் ஏற்பட்டுவந்த தொய்வு நிலை மாறும் . உங்களுடைய சுகஸ்தானத்தில் ராஜ கிரகமான குரு பகவான் வீற்று இருப்பதால் நிச்சயமாக வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

பொருளாதரத்தில் இருந்து வந்த தேக்கநிலை மாறும் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் கடன் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு திருமணம் சம்ந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும் .

2019ம் ஆண்டு குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களுடை வாழ்வில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும் . இது வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெரும் வாய்ப்புகள் உண்டாகும்.

காதல் விஷயங்களில் விட்டு கொடுத்து செல்வது உங்களுக்கு மிக மேன்மையான பலன்களை தரும்.

சிம்ம லக்ன பலன்கள் : புதிய புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். கிரகங்களின் சார பலன்கள் உங்களுக்கு அனுகூலம் தரக் கூடியதாக அமைந்துள்ளது.

simmam

மகம் நட்சத்திரம் : உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும்.

பூரம் நட்சத்திரம் : தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் எந்த ஒரு விசயத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரம் : கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியும். சேமிக்கும் பழக்கம் மேலோங்கும்.

அதிர்ஷ்டமான எண்கள் : 1,3,9

அதிர்ஷ்டமான நிறம் : சிகப்பு மற்றும் மஞ்சள்.

பரிகாரம் : கோதுமையில் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுப்பதும் ஓடுகின்ற நீரில் ஏழு செப்பு நாணயங்களை விடுவதும்  உங்களது கர்மா சம்மந்த பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த பரிகாரம் மிக நல்ல தீர்வாக அமையும்  .

மேலும் தந்தை வழி உறவினர்களிடத்தில் இனக்கமான நடந்து கொள்வதும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதும் உங்களுக்கு மேன்மையான பலன்களை கொடுக்கும்.