2019ம் ஆண்டின் கடக ராசி புத்தாண்டு பலன்கள் 

 

2019ம் ஆண்டின் கடக ராசி புத்தாண்டு பலன்கள் 

கடக ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கடகம் :

சந்திரனை ராசிநாதனாக கொண்ட கடக ராசி நேயர்களே . உங்களது குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்டவர்கள் நீங்கள் . இந்த ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருப்பார்கள் .  

2019 ஆம் ஆண்டு மிக நல்ல பலன்களை பெறக்கூடிய ராசியாக கடக ராசி அமைந்திருக்கின்றது. இந்த ராசிக்காரர்கள் எடுக்கின்ற அனைத்து புதிய முயற்ச்சிகளிலும் வெற்றி கிடைக்கும். 

kadakam

மனதில் இருந்து வந்த தேவை இல்லாத கவலைகள் நீங்கும். கடக ராசிகாரர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகள் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வந்த நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரக்கூடிய பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நீண்டநாட்களாக குடும்ப உறுப்பினர்கள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் நல்ல கால கட்டமாக இந்த 2019 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. 

kadakam

பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும் மேலும் பொருளாதாரத்தில் தன் நிறைவு  உண்டாகும் . இதுவரை இருந்து வந்த கடன் சுமைகள் நீங்கும் . காதல் திருமணம் நடைபெறுவதற்கு உதவியாக பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு அமைந்துள்ளது .

கடக லக்ன பலன்கள் : நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றி பெரும்.

புனர்பூசம் நட்சத்திரம் : புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

பூசம் நட்சத்திரம் : சுப காரிய தடைகள் நீங்கும்.

ஆயில்ய நட்சத்திரம் : கடன் தொல்லைகள் நீங்கும் .

kadakam

பரிகாரம் : உங்களது தாய் மற்றும் உங்களது குடும்ப பெண் உறுப்பினர்கள் இடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வது மிகசிறந்த பரிகாரமாக அமையும் .