2018-ல் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ் திரைப்படங்கள்!

 

2018-ல் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ் திரைப்படங்கள்!

சர்வதேச திரைப்பட இணையதளமான ஐ.எம்.டி.பி-யில் 2018ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் சில இடம்பெற்றுள்ளன.

சர்வதேச திரைப்பட இணையதளமான ஐ.எம்.டி.பி-யில் 2018ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் சில இடம்பெற்றுள்ளன.

2018ம் ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் பாலிவுட் திரைப்படங்களை விட பிராந்திய மொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் டாப் வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ் மொழி படங்களான ’ராட்சசன்’ மற்றும் ‘96’ திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

96movie

இந்த பட்டியலில், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, பார்வையற்ற பியானோ கலைஞராக நடித்த மராத்தி திரைப்படம் ’அந்தாதுன்’ முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைத்த சைக்கோ திரில்லர் படமான ‘ராட்சசன்’ திரைப்படமும், பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து வெளியான ‘96’ திரைப்படமும் 2வது இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கு சினிமாவில் இருந்து ரங்கஸ்தாலம், மகாநதி ஆகிய படங்களும் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ratchasan

2018ம் ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து 2 படங்கள் இடம் பெற்றுள்ளது கோலிவுட்டினரையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.