2018-ல் அதிக படங்களில் நடித்த நடிகை யார்?

 

2018-ல் அதிக படங்களில் நடித்த நடிகை யார்?

2018ம் ஆண்டு அதிக படங்களில் நடித்து, நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தைத் தட்டி சென்று உள்ளார்

சென்னை: 2018ம் ஆண்டு அதிக படங்களில் நடித்து, நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தைத் தட்டி சென்று உள்ளார். 

keerthi suresh

கடந்த 2015ம் ஆண்டு “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.தமிழ்,தெலுங்கு,மலையாளம், என பல மொழிகளில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்கிறார்.தனது முதல் படம் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து படங்கள் நடித்து தனது திறமையை நிரம்பித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “நடிகையர் திலகம்” திரைப்படம் இவரின் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

இந்நிலையில், 2018ம் ஆண்டில் இவர் மொத்தம் 7 படங்களின் நடித்து முதல் இடத்தை தட்டி சென்றுள்ளார்.

அந்த படங்களின் விபரங்கள்: 

1.அக்னியாதவாசி (தெலுங்கு ) 
2.தானா சேர்ந்த கூட்டம் 
3.நடிகையர் திலகம் 
4.சாமி ஸ்கொயர் 
5.சண்டக்கோழி 2 
6.சர்கார் 
7.சீமராஜா (கெஸ்ட் ரோல்) 

மேலும் 2019ம் ஆண்டிலும் கீர்த்தி சுரேஷ் தான் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பட்டத்தை தட்டிசெல்வார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.