2018-ஆம் ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை – பட்டியல் வெளியீடு

 

2018-ஆம் ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை – பட்டியல் வெளியீடு

2018-ஆம் ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை குறித்து கூகுள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி: 2018-ஆம் ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை குறித்து கூகுள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கி வரும் கூகுள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடப்பட்ட விஷயங்களை பட்டியலிடும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இயர் இன் சர்ச் (Year in Search) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த கூகுள் தேடல் மற்றும் நாடுவாரியாகவும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவற்றை கீழே காணலாம்.

ஒட்டுமொத்த தேடல்

பிபா உலகக் கோப்பை 2018, லைவ் ஸ்கோர், ஐபிஎல் 2018, கர்நாடகா தேர்தல் முடிவுகள், பால் வீர்

திரைப்படங்கள்

ரோபோட் 2.0, பாகி 2, ரேஸ் 3, அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், டைகர் ஸிந்தா ஹை

பிரபலங்கள்

பிரியா பிரகாஷ் வாரியர், நிக் ஜோனஸ், சப்னா சவுத்ரி, பிரியங்கா சோப்ரா, ஆனந்த் அஹுஜா

செய்திகள்

பிபா உலகக் கோப்பை 2018, கர்நாடகா தேர்தல் முடிவுகள், பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம், ஸ்டேட் ஆஃப் யுனிட்டி, நிபா வைரஸ்

இதைத்தொடர்ந்து ‘How to..’, தேடல்களில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர், ஆதாருடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி உள்ளிட்டவையும், ‘What is…’, தலைப்பில் சட்டப்பிரிவு 377, சிரியாவில் என்ன நடக்கிறது, கிகி சேலஞ்ச் என்றால் என்ன உள்ளிட்டவற்றை பெரும்பாலானோர் தேடியிருக்கின்றனர். மேலும் சில தேடல் முடிவுகள் குறித்து இந்த https://trends.google.com/trends/yis/2018/IN/ லிங்கில் தெரிந்து கொள்ளலாம்!