2018-ஆம் ஆண்டில் ஃபிளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியீடு

 

2018-ஆம் ஆண்டில் ஃபிளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியீடு

2018-ஆம் ஆண்டில் ஃபிளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை: 2018-ஆம் ஆண்டில் ஃபிளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில் ஃபிளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஃபிளிப்கார்ட் தளத்தை பொறுத்தவரை, இந்தாண்டு அதிகம் விற்பனை ஆன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பட்டியலில் சியோமி முதலிடத்தில் உள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தாண்டு ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையில் சக்கைப்போடு போட்டன. மேலும் இந்தாண்டு பல புதிய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் 10 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன் சாதனங்கள் விற்பனையாகி உள்ளன. அதில் ரியல்மி, ஹானர் மற்றும் அசூஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.

ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் சுமார் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. அசூஸ் பிராண்டில் சென்போன் மேக்ஸ்ப்ரோ m1 ஸ்மார்ட்போன் 10 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. அதேபோல ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 5A, ஹானர் 9 லைட் உள்ளிட்ட போன்களும் விற்பனையில் முன்னணி இடத்தை பெற்றுள்ளன. மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களே நடப்பாண்டில் ஃபிளிப்கார்ட்டில் அதிகம் விற்பனையாகியுள்ளது. குறிப்பாக சொல்லப் போனால் ரியல்மி 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, அசூஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1 மற்றும் ஹானர் லைட் ஆகிய மாடல்கள் ஆகும்.